☰
×

ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது?- அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் 

 

விருதுநகரில் ரூ.4.60 கோடி மதிப்பிலான வணிகவரித் துறையின் புதிய கட்டடத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை" என கனிமொழி எம்.பி. கூறுகிறார்.  கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில், இந்த 150 நாட்களில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது.  ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்" என்றார்.