×

“கண்டிப்பாக ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி

 

கண்டிப்பாக  ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது.  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 கொடுப்பேன் என்று விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். ஆனால் போன மாதம் பழைய தொகையான ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. 

விஜயின் வாக்குறுதியான மாதம் ரூ.2500 எப்போது வரும் என மகளிர் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், விருதுநகரில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி,  "2500 ரூபாய் பணத்தைப் பத்தி கேக்குறாங்க நிறைய அம்மாக்கள், கண்டிப்பா இப்போதைக்கு நமக்கு பழைய மாதிரி கண்டினியூவா அந்த 1000 ரூபாய் பணம் நம்ம குடுத்துக்கிட்டே இருக்கோம்,  2500 ரூபாய் கொடுப்பதற்கான வழிமுறைகள் நம்ம வந்து எல்லாமே... ஒவ்வொரு விஷயமா நம்ம போய் ஒண்ணா செஞ்சுகிட்டே வர்றோம், நீண்ட பிராசஸ் இல்லையா, கொஞ்சம் டைம் எடுக்கும்,  நம்ம மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக, உறுதியாக 2500 ரூபாய் பணம் உங்களுக்கு வழங்கப்படும், அதுல எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அதனால இப்போ வந்து, இதுல பதிவு செய்தவர்கள் பணம் வரலன்னு நிறைய பேர் வந்து மனு குடுக்குறாங்க, இது வந்து ப்ராசஸ்ல இருக்கு, அலோவ் பண்ணாதவங்க தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு, கடந்த ஆட்சியில, அதையும் எடுத்து, அதாவது நிறைய பேர்... வீட்ல ரெண்டு பேர் நாங்க மனு குடுத்துருக்கோம், நிறைய பேர் குடுத்துருக்கீங்க, நிறைய பேர் குடுக்கல... இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை, கொஞ்சம் சரிபண்ணி, அதுக்கப்புறம் தான் நம்ம இதெல்லாமே வந்து மக்கள் கிட்ட... எல்லா மக்களுக்கும் பயன்பெறும் வகையில செய்யணும், அதுக்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால கொஞ்சம் பொறுமை காருங்கள். கண்டிப்பா நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியது போல் 2500 ரூபாய் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்!" என்றார்.