×

“குருமூர்த்திக்கு தான் ஒரு சாணக்கியன்; கிங்மேக்கர் என்று நினைப்பு” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

குருமூர்த்தி வேண்டுமானால் டிரம்புக்கு யோசனை சொல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர் . அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களில் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி வேண்டுமானால் டிரம்புக்கு யோசனை சொல்லலாம். குருமூர்த்திக்கு தான் ஒரு சாணக்கியன்; கிங்மேக்கர் என்று நினைப்பு. வீடு தீப்பற்றியும் எரியவில்லை; அதை அணைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல்
 

குருமூர்த்தி வேண்டுமானால் டிரம்புக்கு யோசனை சொல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர் . அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களில் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி வேண்டுமானால் டிரம்புக்கு யோசனை சொல்லலாம். குருமூர்த்திக்கு தான் ஒரு சாணக்கியன்; கிங்மேக்கர் என்று நினைப்பு. வீடு தீப்பற்றியும் எரியவில்லை; அதை அணைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் இல்லை என்றால் ராகுல் ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருக்க மாட்டார், ஓட்டுக்காக தான் அவர் வந்தார் என்றார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அப்பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளது. ஆன்மீகத்தையும் தேசியவாதத்தையும் விரும்புவர்கள் அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். தமிழகத்தில் பாஜக இன்னும் 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடையும். வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் செளரி கூறியதை போல சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.