முதலில் என் பெயர் தான் இருக்கணும்... எதற்கு கீர்த்தனா பெயர்? - ஆட்சியரை கடிந்துகொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி
விருதுநகரில் ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் இரண்டாவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இடம்பெற்றிருந்ததால் அவர் ஆட்சியரிடம் கோபப்பட்டார்.
விருதுநகரில் நடைபெற்ற ‘START RUN STOP DRUGS’ நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்கு கீழ் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இடம்பெற்றிருந்தது. முதலில் அமைச்சர் கீர்த்தனா பெயர் இடம்பெற்றிருந்ததால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது. எனது துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி இது. PROTOCOL-ன் படி முதல்வர் பெயருக்கு பின் எனது பெயர் இடம்பெற வேண்டும். துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் என் பெயரே முதலில் வர வேண்டும்.. இதை பலமுறை சொல்லி ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த தவறை செய்கிறீர்கள்? என அதிகாரிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி கடிந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி 10ம் இடத்தில் இருக்கிறார். ஆனால், விருதுநகரில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தான் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற காரணத்தால், மேடை பேனரில் தனது பெயரை மேலே போட்டு கீர்த்தனாவின் பெயரை கீழே போட்டிருக்கவேண்டும் என அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி ஜெகதீஸ்வரியின் இடம் 23.