மழைக்காலத்தில் பேனர்கள் வைக்கத் தடை- அமைச்சர் அதிரடி உத்தரவு
மழை காலங்களில் பிளெக்ஸ், பேனர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறது என்பதால், பேனர்கள் எந்தப் பகுதியில் யார் வைத்திருந்தாலும், அவை அனைத்தையும் மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜய் பாலாஜி, “வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 மாதங்களுக்கு எங்கேயும் பேனர்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழை காலங்களில் பிளெக்ஸ், பேனர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறது என்பதால், பேனர்கள் எந்தப் பகுதியில் யார் வைத்திருந்தாலும், அவை அனைத்தையும் மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு எந்த இடத்திலும் பேனர்கள் வைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகாலில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ஒருமுறைக்கு இருமுறை எச்சரியுங்கள். மாமன்ற உறுப்பினர்கள் கூறும் பணிகளை அதிகாரிகள் புறக்கணிக்கக் கூடாது. கவுன்சிலர்கள் வார்டு நிதிப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்” என்றார்.