அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
Updated: Jul 13, 2024, 13:53 IST
அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடைத்தேர்தல் வெற்றிமுகத்தை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயம் வந்தார், துரைமுருகன்.
அண்ணா அறிவாலயம் வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார். பின்னர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.