×

"நான் அப்படி சொன்னது தப்புதான்”- மன்னிப்புக்கோரிய அமைச்சர் அருண்ராஜ்

 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த விழாவில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது, வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம். அன்புச் சகோதர சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு செய்கிறோம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை…

— Arunraaj TVK (@arunraajkg) August 13, 2026


இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் ட்தளத்தில், “இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம். இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது... வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம்.  மாற்றுத் திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும்  கொண்டிருக்கிறோம். அன்புச் சகோதர சகோதரிகளுக்கு  நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு  செய்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.