☰
×

ஆளுநர் பதவியே தேவையில்லை என்றவர்கள் இப்போது ஆளுநரை நாடுவது ஏன்?- அருண்ராஜ் 

 

ஆளுநர் பதவியே தேவையில்லை என்றவர்கள் இப்போது ஆளுநரை நாடுவது ஏன்? என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உதயநிதி ஆளுநரிடம் மனு கொடுத்தது குறித்து பதில் அளித்துள்ள அமைச்சர் அருண்ராஜ், "தி.மு.க.வுக்கு இரட்டை நாக்கு, இரட்டை வேடம். இது திமுகவுக்குப் புதிதல்ல, காலம் காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு ஆளுநரை கீழ்த்தரமாக, கவர்னர் பதவியே தேவையில்லை, அவர் ஒரு தபால்காரர் என விமர்சித்துப் பேசியவர்கள், அவருடைய அலுவலகத்திலேயே மனு அளிக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் எத்தனை வழக்குகளில் சிபிஐ விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்றமே சொன்னாலும், அதை ஏற்காமல் உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தவர்கள். இப்போது எதன் அடிப்படையில் சிபிஐ மீது நம்பிக்கை வந்தது என்று தெரியவில்லை. ஒன்றிய அரசுடன் இருக்கும் மறைமுகக் கூட்டணியினால் வெளிப்படையாக விசாரணைக்குக் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். ஆளுநர் பதவியே தேவையில்லை என்றவர்கள் இப்போது ஆளுநரை நாடுவது ஏன்? திருப்பரங்குன்றத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக்க பாஜக சங்பரிவார் கும்பல் முயற்சிக்கிறது. 

பல்வேறு குற்ற வழக்குகளில் சிபிஐ விசாரணை கோரப்பட்டபோது, அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பது திமுகவுக்கு புதிதல்ல, காலம் காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.