"CM ஆய்வில் கள்ளக்குறிச்சி விவகாரம்.. உண்மை இருந்தால் நடவடிக்கை’’ - அமைச்சர் அருண்ராஜ்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிபதி பேசியது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. உதயநிதி அரசியல் ரீதியாகப் பேசுகிறார். கடந்த திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாகப் பலமுறை பேசிவிட்டோம். அது முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. இந்த விவகாரம் ஆராயப்பட்டு, உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவை விமர்சித்தால் தேச துரோகம் என்று கூறுவது போல், திமுகவை விமர்சித்தால் சமூகத்துக்கே எதிரானவர்கள் என சித்தரிக்கப்படுகிறது." என்றார்.