"தவெக அரசுக்கு இது தல தீபாவளி, தளபதி தீபாவளி"- அமைச்சர் அருண்ராஜ்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் செவிலியர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார் அமைச்சர் அருண்ராஜ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "தவெக அரசுக்கு இது தல தீபாவளி, தளபதி தீபாவளி. பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் மோசடி விவகாரத்தில் அவர்கள் போல எங்களுக்கு போலி அரசியல் செய்ய தெரியாது. புத்தகத்தில் ஊழல் செய்தது மிகவும் வருத்தத்திற்குரியது. போலி புத்தகங்கள் யார் கையிலும் கிடைக்கக் கூடாது எடைக்கு கூட போடக்கூடாது. தீயிட்டு எரிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் காலியாக உள்ள அரசு மருத்துவமனை முதல்வர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இது தி.மு.கவுக்கு பெரிய களங்கம்.. பெரியார் பெயரை வைத்து ஏமாற்றிய தி.மு.கவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பார்ட்டி பஃண்ட் இல்ல அது குடும்ப பஃண்ட். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் தவெகவிற்கு ஏற்பு இல்லை என வெளிப்படையாக அறிவித்து நாங்கள் அரசியல் செய்துவருகிறோம். அவர்கள் போல பெயருக்கு பெரியாரை சொல்லிவிட்டு, வீட்டில் சாமி கும்பிடும் அரசியல் செய்ய எங்களுக்கு தெரியாது. புத்தகத்தில் ஊழல் செய்தது மிகவும் வருத்தத்திற்குரியது.
ஒவ்வொரு வருஷமும் மாமூல் கேட்டு ரொம்ப பிரச்சனை பண்ணுவார்கள். ஆனால் இந்த வருஷம் யாருமே எந்த தொந்தரவும் பண்ணவில்லை என பட்டாசு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக சொன்னார்கள். தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும்போது விபரீத விளையாட்டு வேண்டாம். ஒரு சில நொடி அஜாக்கிரதை ஆபத்தில் முடியலாம். அதனால் பாதுகாப்பாக மகிழ்ச்சியா தீபாவளியை கொண்டாடுங்கள். நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை தீக்காயம் தொடர்பாக 98 அழைப்புகள் வந்துள்ளன" என்றார்.