×

எழும்பூர் மருத்துவமனைக்கு முதலமைச்சர் திடீர் விசிட் அடித்தது ஏன்?- அருண்ராஜ் விளக்கம்

 

எழும்பூர் மருத்துவமனைக்கு முதலமைச்சர் திடீர் விசிட் அடித்தது ஏன்? மருத்துவர்களிடம் அறிவுறுத்தியது என்ன? என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “எழும்பூரில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் CM விஜய் ஆய்வு செய்தார். சேவை எப்படி இருக்கிறது? வார்டுகள் எத்தனை உள்ளன? என்பதை பார்வையிட்டார். எதிர்காலத்தில் தேவைப்படும் கட்டிடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட பணம் வாங்குவது மருத்துவமனையில் புழக்கத்தில் உள்ளது. அந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன். அப்படி செய்பவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஏழை மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது. எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி, ஊழியர்கள் பணம் கேட்டாலோ, வற்புறுத்தினாலோ 104 என்ற எண்ணுக்கு உடனடியாக புகார் தெரிவியுங்கள்” என்றார்.