குறைந்தபட்சம் ரூ.100 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடையாக வழங்கலாம் - அமைச்சர் அருண்ராஜ்..!
சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், “தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக, பொதுமக்கள் நிதியுதவி வழங்கும் வகையில் "நலம் TN" என்ற புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: “உங்கள் வீட்டில் ஒரு திருமணமோ அல்லது பிறந்தநாள் விழாவோ எதுவாக இருந்தாலும் சிறு பங்களிப்பை அளிக்கலாம். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி, லட்ச ரூபாயாக இருந்தாலும் சரி, அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக வழங்குங்கள்.
நீங்கள் எந்த மருத்துவமனைக்கு உங்கள் நன்கொடை செல்ல வேண்டும் என்பதையும் நீங்களே தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 100% முறையான வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்று கூறினார்.
மேலும், மண் மீதும், மக்கள் மீதும் மாறாத அன்பு கொண்டவர் முதல்வர் விஜய்; தமிழகத்தில் தற்போது நடப்பது அன்பு சாம்ராஜியம்; இதை யாராலும் அசைக்க முடியாது” அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.