☰
×

72 நாள் வி.எஸ்.பாபுவுக்கு நடந்தது என்ன? இறப்பில் சந்தேகமா?- அமைச்சர் அருண்ராஜ்

 

முதல்வர் தினமும் வி.எஸ்.பாபு உடல்நிலை பற்றி விசாரிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். 

கொளத்தூர் எம்எல்ஏ இறுதி அஞ்சலியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு ஒருங்கிணைந்த மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளித்தோம். பாபுவின் உடல்நிலை குறித்து தினமும் முதல்வர் விஜய் கேட்பார். இரண்டு மூன்று முறை அவர் உடல் நிலை முன்னேற்றமடைந்து வீடு திரும்பும் சூழல் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக முன்னேற்றத்தை தக்கவைக்க முடியவில்லை.  சட்டமன்ற உறுப்பினர் என்பதை தாண்டி எங்களுக்கு ஒரு அண்ணனாக இருந்தவர்.. முடிந்த அளவு சிகிச்சை கொடுத்தோம்.. அவரது இழப்பு மிகப்பெரிய வெற்றிடம்!" எனக் கூறினார்.