×

"கல்வியில் மத்திய அரசு அரசியல் செய்கிறது"- தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

 

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை, நாகரிகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்... தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை.என நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தவறான கருத்துகளுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். உண்மையாகவே நாம் என்ன பேசுகிறோம் என்பதை தர்மேந்திர பிரதான் அறிந்திருக்கிறாரா? அல்லது எழுதி கொடுத்ததை மீண்டும், மீண்டும் படிக்கிறாரா? கல்வியில் மத்திய அரசு செய்யும் அரசியல் தலையீட்டிற்கு மன்னிப்பே கிடையாது. அவர்களின் துரோகத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் மறக்க மாட்டார்கள். முதலமைச்சர் தலைமையில் மாநில உரிமைக்கும், கல்வி உரிமைக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

 

NEP என்பது புதிய கல்விக் கொள்கை அல்ல, மாறாக RSS-இன் ஒரு நிகழ்ச்சி நிரல். தமிழ்நாடு அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது. நமது திமுக எம்.பி.க்கள் கல்விக்காகவும், நமது மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.