முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
Jun 27, 2024, 11:45 IST
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் "திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்" எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.