×

“லஞ்சம் கொடுத்ததற்காக மரிய வில்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”- அன்பில் மகேஷ்

 

லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் கூறியது தவறு என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் பேரவையில் குற்றஞ்சாட்டிய நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், “நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் நின்று, தான் லஞ்சம் கொடுத்தேன் என பேசியுள்ளார். லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் கூறியது தவறு. அவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். மரிய வில்சன் லஞ்சம் கொடுத்திருந்தால் அது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை பற்றி அவதூறாக பேசினால் வழக்கு தொடர்வோம். இதேபோல் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்தேன். அன்பு மொழி, கருணை மொழி தான் தெரியும் என பேசிய அமைச்சர் மரிய வில்சன், என் மீது அவதூறுகூறுகிறார். சட்டப்பேரவையில் விவாதத்தை மடைமாற்றம் செய்கின்றனர்” என்றார்.