×

ஜூன்  1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  - அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்.. 

 

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.