×

CBSE-ல் ’நோ ஆல் பாஸ்’... கையெழுத்து கேட்டால் பெற்றோர் எதிர்த்து கேள்வி கேளுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

 

CBSE-ல் ’நோ ஆல் பாஸ்’ தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் எதிர்த்து கேள்வி கேளுங்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், CBSE-ல் 3,5,8ஆம் மாணவர்களை குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "CBSE-'நோ ஆல் பாஸ்' தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் எதிர்த்து கேளுங்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை CBSE செயல்படுத்தும் போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
5 ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கினால் இடைதிற்றல் அதிகரிக்கும். 5,8ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். CBSE-ல் "நோ ஆல் பாஸ்" தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றரிகள் எதிர்த்து கேள்வி எழுப்புங்கள் என கூறினார்.