"அடித்தாலும் உதைத்தாலும் தமிழ்தான் எனக்கு முக்கியம்" - அமைச்சர் ஆனந்த்
தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற "தமிழ்நாடு நாள்" விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த், "அடித்தாலும் உதைத்தாலும் தமிழ்தான் எனக்கு முக்கியம், தமிழில்தான் நான் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என் உடலோடு சேர்த்து ஒரு திருக்குறள் புத்தகத்தை வைத்து நல்லடக்கம் செய்யுங்கள் என அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். உங்கள் பேச்சு உணர்வுபூர்வமாக இருந்தாலும் சங்கடமாக இருந்தது.. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா.. நாங்கள் இருக்கிறோம்.. விட்டு விடமாட்டோம். நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் தமிழ் ஆசிரியர் என்னை அடிப்பார். “க்-குப் புள்ளி வைக்க மாட்டியா? ன்-னுக்குப் புள்ளி வைக்க மாட்டியா?” என்று கேட்டு அடிப்பார். என் நண்பர்கள், “இவரிடம் அடிவாங்க முடியாது; நாம் ஃபிரெஞ்சு வகுப்புக்கு மாறிவிடலாம்” என்று சொல்வார்கள். ஆனால், அப்போது நான், “தமிழ்தான் என் தாய்மொழி. அடித்தாலும், உதைத்தாலும் தமிழ் தான் எனக்கு முக்கியம். தமிழ்தான் படிக்க ஆசைப்படுகிறேன்” என்று சொன்னேன்" என்றார்.