"தீபாவளி பணம் வருது"- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
திமுக- அதிமுக இணைந்து இபிஎஸ்ஸை முதலமைச்சராக்க பேசினார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, “திமுக- அதிமுக இணைந்து இபிஎஸ்ஸை முதலமைச்சராக்க பேசினார்கள். காசு கொடுத்ததால்தான் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தாரா? கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா? இல்லையா? திமுக ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்ட் தோழர்களால் சொல்ல முடியுமா? எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். 2026 தேர்தலில் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தனர். வெறும் இன்ஸ்டாகிராம் வெச்சி உங்கள முடிச்சி விட்டோம். ஊழல் சுத்தமா ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த காலத்தில் நடந்திருக்கிறது.
திமுக இங்கே டிபாசிட் இழக்கும், கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள். கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை; மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது. எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 மினிஸ்டர் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார்” என்றார்.