×

"திமுகவை நாங்க Miss பண்றோம்... சீக்கிரம் வாங்க சண்டை போடலாம்" - ஆதவ் அர்ஜுனா

 

எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். சட்டசபையில் கீழே உட்கார்ந்திருந்த திமுக உறுப்பினரைக்கூட, தன் கையால் தூக்கிவிட்டவர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். 

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, “திமுக We Miss You... எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. சீக்கிரம் வாங்க... மக்களுக்காக சண்டை போடலாம். சட்டப்பேரவையில் நடைபெறும் சண்டைகள் மக்களுக்காக தான். முதலமைச்சர் விஜய் யாரையும் உருவ கேலி செய்யவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் மொழி இருக்கிறது. எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். சட்டசபையில் கீழே உட்கார்ந்திருந்த திமுக உறுப்பினரைக்கூட, தன் கையால் தூக்கிவிட்டவர். எதிர்கட்சிகளை எதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய GEN Z இளைஞர்களுக்கு கடந்த காலங்களில் என்னென்ன ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.. அப்படி சொன்னால் தான் நாங்கள் அந்த தவறை செய்ய மாட்டோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அனைத்து நாட்களிலும் மாலை கூட்டம் முடியும் வரை தி.மு.க உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த இரண்டு நாட்களாக அவையில் அவர்கள் இல்லை. திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே நடப்பது வெறும் வார்த்தை போர் தான். அது மக்களுக்காக நடைபெறும் சண்டை தான்” என்றார்.