×

“என் அம்மா ஒரு விவசாயி... விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்கு தெரியும்”- ஆதவ் அர்ஜூனா

 

அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.


சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “அரசியலில் பெரும்பான்மை-சிறுபான்மை என்பது இருக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் தவெக நோக்கம். இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று பல கட்சிகள் சொல்வார்கள். பாதுகாப்புக் கொடுப்பதுதான் அரசியலா? அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல். குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்கு வருவது தான் உண்மையான அரசியல்.. அவர்களால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் போது சி.ஜோசப் விஜய் என தன் பெயரை தைரியமாக அறிவித்தார் தலைவர். மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் சூழலில், ஆம், பிறப்பால் நான் கிறிஸ்துவன், ஆனால் வளர்ப்பால் அனைத்து மதத்தினராலும் அங்கீகரிக்கப்பட்டவன். என்னுடைய சிந்தனை எல்லா மதங்களுக்கும் உரியது. நான் சமத்துவமானவன். அதற்காக நான் பிறந்த அடையாளத்தை மறைக்க மாட்டேன் என செயல்பட்டவர் முதல்வர் விஜய். எனது அம்மா ஒரு விவசாயி. எனக்கு 6 வயதாக இருந்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டார். விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும்” என்றார்.