"Patch Work பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல்"- ஆதவ் அர்ஜூனா
அடிப்படை வசதிகள் இல்லை, அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சீரமைக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "தமிழ்நாடு அனைத்திலும் சரியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய போலியான அரசு கிடையாது. மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி, மின்சார வசதி இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் சரிசெய்ய உள்ளோம்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 2025 ஆம் ஆண்டு மட்டும் நெடுஞ்சாலை துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது போன்ற Patch work பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் செய்துள்ளனர். 5,626 பள்ளிகள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. அதில்தான் 80% ஊழல் நடந்துள்ளது. 5,626 பள்ளிகளை ஆய்வு செய்து தரவுகளை எடுத்துள்ளோம். இப்பள்ளிகளில் 15,661 கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன, இது 20 ஆண்டுகாலப் பிரச்னை. அடுத்த 2 ஆண்டுகளில் இதை சரி செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.