×

தவெக அரசு கடன்வாங்கி நன்மை செய்கிறது - ஆதவ் அர்ஜூனா

 

தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “போன ஆட்சியில கடன் வாங்கி ஊழல் செஞ்சாங்க. நம்ம ஆட்சியில மக்களுக்கு நல்லது செய்றோம். தவெக அரசு கடன் வாங்கி நன்மை செய்கிறது. இந்த ரிப்பன் மாளிகையை விற்காமல் விட்டுட்டாங்க. விட்டிருந்தா இதையும் வித்திருப்பாங்க. இத்தனை நாளா ஏன் வரலைன்னா, எதிர்க்கட்சியா இருக்கும் போது பிரச்சினையைக் கேட்போம். ஆனா, ஆளுங்கட்சியா இருக்கும் போது பிரச்சினையைத் தீர்த்து வெச்சுட்டு உங்ககூட இருக்க வரணும். உங்கள் பிரச்சினையை நாங்கள் புரிந்து கொண்டபடி, நாங்கள் வந்து 100 நாட்கள் தான் ஆகிறது. அண்ணனுக்கு சிறிது நேரம் கொடுங்கள், எங்களுக்கு நேரம் வேண்டும். என்ன செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் பேச உத்திரவிட்டிருக்கிறார் முதல்வர். தூய்மை பணியாளர்களை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை, சரி செய்து தீர்வு காண வந்திருக்கிறோம், உங்களோடு இருக்கிறோம். செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருந்தாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் இருக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் ஆகிறது, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். தூய்மை பணியாளர்கள் ஒருவர் மீது கூட கை வைக்கக் கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம். எந்த சூழலிலும் தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். பிரச்சனைக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை, சரிசெய்து தீர்வு காணவே வந்துள்ளோம். அதிகாரத்தில் நாங்கள் இருந்தாலும் சில நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன; எனினும் நாங்களும் அரசு நிர்வாகமும் என்றும் உங்களோடு தான் இருப்போம்” என்றார்.