×

ஆவினில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை! தவெக அரசின் புதிய திட்டம்

 

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக தானியங்கி பால் விற்பனை இயந்திரத்தை சோதனை அடிப்படையில் அமைக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக தானியங்கி பால் விற்பனை இயந்திரத்தை சோதனை அடிப்படையில் அமைக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தானியங்கி பால் விற்பனை இயந்திரம் சோதனை அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தலா ஒரு இயந்திரம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயந்திரங்களை அமைத்த பிறகு வீடுகள், ஓட்டல்களுக்கு பாக்கெட்டுகளில் பால் விற்பனை நிறுத்தப்படும்.  உ.பி.யை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ரூ.3.60 லட்சத்திற்கு இயந்திரம் வாங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பால் விற்பனை இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் வரவேற்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஆவின் கூறியுள்ளது. உதகை, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழங்கில், பால் விநியோகிக்க பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மாற்று வழியை கண்டறிய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.