×

“தளர்வுகள் இல்லா ஊரடங்கிலும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” : பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு சுமார் நான்காவது மாதத்தை எட்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் “ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக” ஜூலை மாதம் 5, 12, 19, 26ஆகிய தேதிகளில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் “தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு” என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதே போன்று நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமுலில் இருந்த போது பால் கிடைக்காது என்கிற எண்ணத்தில் முதல் நாளிலேயே மக்கள் கூடுதலாக பாலினை வாங்கி இருப்பு வைத்து கொண்டதால் பல்வேறு இடங்களில் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பலரும் பால் கிடைக்காமலும், அதே நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பால் முகவர்கள் பால் விற்பனையாகாமலும் அவதியடைந்தனர்.

தற்போது ஜூலை மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அன்றைய தினம் பால் முகவர்களின் கடைகளிலும், விநியோக மையங்களிலும் மட்டும காலை 9.00மணி வரை பால் தட்டுப்பாடின்றி, தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பால் முகவர்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் எவரும் ஞாயிற்றுக்கிழமை பால் கிடைக்காது என எண்ணி முதல் நாளிலேயே (சனிக்கிழமை) கூடுதலாக பாலினை வாங்கி இருப்பு வைத்து செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்படவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பால் விற்பனையாகாமல் பால் முகவர்கள் அவதியடையவும் காரணமாக வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.