×

தி.மு.கவால 1,825 கோடி ரூபா ஆவினுக்கு நஷ்டம்... சம்பாதிக்குறதுலையே தி.மு.க குறியா இருந்தது- பால் முகவர்கள் சங்கம்

 

முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது சிக்கல் ஏற்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பால் கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தை சொல்லிதான் கடந்த ஆட்சியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் உள்ளனர். இன்று தமிழ்நாட்டில் இரண்டேகால் கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது.  அதிமுக ஆட்சியில் 38 லட்சம்  லிட்டர் பால் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால்  திமுக ஆட்சியில் 25 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது. பால் பவுடரும், வெண்ணையும் வாங்கி அதுல பணம் சம்பாதிக்குறதுலையே தி.மு.க குறியா இருந்தது. 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்கவில்லை. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.80க்கு விற்கின்றன. ஆவினில் லிட்டருக்கு ரூ.60க்கு விற்கிறது. 8 மணிக்கு மேல் சென்றால் ஆவின் பால் கிடைப்பதில்லை. ஆவின் பால் கிடைக்காததால் தூங்கி எழுந்தவுடனேயே மக்கள் அதிருப்தியில்தான் இருக்கின்றனர். காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறு. உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி கொடுத்து, ஆவின் பாலை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்திருந்தீர்கள் என்றால் இன்று இந்த தட்டுப்பாடு வந்திருக்காது. ஆவின் பால் தட்டுப்பாடு 3 ஆண்டுகளாக இருக்கிறது. இதனை சரிசெய்ய கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஏற்கனவே ஆவின் நிறுவனம் ரூ.4,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் போய்கொண்டு இருக்கிறது. தி.மு.கவால 1,825 கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம். முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது சிக்கல் ஏற்படுகிறது” என்றார்.