திருமா பேசியபோது மைக் அணைப்பு - இந்தியா கூட்டணி எதிர்ப்பு
Jun 26, 2024, 13:50 IST
திருமாவளவன் பேசி முடிக்கும் முன்பாகவே மைக் அணைக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டனி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை இடமாற்றம் செய்தது குறித்து விசிக எம்.பி. திருமாவளவன் கேள்வி எழுப்பியபோது அவரது மைக் OFF செய்யப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் மைக் அணைக்கப்பட்டபோதும் தனது பேச்சை தொடர்ந்தார் திருமாவளவன். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சபாநாயகர் ஓம்பிர்லா பொறுத்துக்கொள்ள மறுப்பதாகப் புகார் தெரிவித்தார்.