#BREAKING விவசாயிகளுக்கு குட்நியூஸ்! கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர் வரத்து
Aug 5, 2026, 17:58 IST
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 11,988 கன அடியில் இருந்து 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர் இருப்பு 36.740 டி.எம்.சி. ஆகவும் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 8 மணி நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.54 அடி உயர்ந்துள்ளது.