×

அதிகளவு பனம்பழம் தின்ற காட்டு யானை உயிரிழப்பு!

அதிகளவு பனம்பழம் தின்றதால் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் – சாம்பார் பள்ளம் ஏரி காப்புக்காட்டில் 22 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரசு வன கால்நடை மருத்துவருடன் வனத்துறையினர் சென்றுள்ளனர். இதில் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றது தெரியவந்தது. அதிகளவு பனம்பழம் தின்றதால்
 

அதிகளவு பனம்பழம் தின்றதால் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் – சாம்பார் பள்ளம் ஏரி காப்புக்காட்டில் 22 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரசு வன கால்நடை மருத்துவருடன் வனத்துறையினர் சென்றுள்ளனர். இதில் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றது தெரியவந்தது. அதிகளவு பனம்பழம் தின்றதால் செரிமானம் ஆகாமல் வயிறு வீங்கி யானை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து யானையின் தந்தங்களை அகற்றிய வனத்துறையினர், அதன் உடலை அங்கேயே புதைத்தனர்.