×

'மெட்டி ஒலி'  நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்!!

 

'மெட்டி ஒலி' தொடர் சீரியல்  நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சீரியல் மெட்டி ஒலி. இது தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்றாக இருந்தது. இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி  சாஸ்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜகாந்த், திருமுருகன் , சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் இயக்குநர் திருமுருகன் கோபி என்ற கதாபாத்திரத்தில் வர அவருக்கு ஜோடியாக உமா மகேஸ்வரி நடித்திருப்பார். இவர் இதே சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வனஜாவின் சகோதரி ஆவார். 

இந்நிலையில் மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உயிரிழந்தார்.  பல மாதங்களாக  உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர்  இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். நடிகை உமா மகேஸ்வரி மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.