☰
×

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ பயண சேவை நேரம் நீட்டிப்பு!

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது. 


இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

நவம்பர் 5, 2026 (வியாழக்கிழமை - இன்று):

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான இரவு 8:00 மணிக்குப் பதிலாக, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.

நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை - நாளை):

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான மாலை 5:00 மணிக்கு பதிலாக, மாலை 4:00 மணிக்கே தொடங்கி, இரவு 8:00 மணிக்கு பதிலாக இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.

முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ இரயில் நேரம்

(06.11.2026):

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும்.

மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும்.

மேற்கண்ட மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை 2026 நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பயணிகள் இதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, சென்னை மெட்ரோவுடன் பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்படப்பட்டுள்ளது.