×

மே.10- 24ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு தினத்தன்று காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழில்கள் வழக்கம் போல இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற எந்த கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு தினத்தன்று காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழில்கள் வழக்கம் போல இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற எந்த கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நாளை ஒரு நாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்குமெனவும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.