☰
×

மெட்ரோ பயணிகளே உஷார்! ஆன்லைன் டிக்கெட் வாங்க முடியாது... CMRL வெளியிட்ட அவசர அறிவிப்பு!

 

சென்னை பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கின்றனர். அதாவது மெட்ரோவில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வீட்டிலிருந்து கிளம்பு போதே ஆன்லைனில் டிக்கெட்டை பெற முடியும்.

அதற்கான பல வசதிகளை மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது. அதாவது வாட்ச் அப், க்யூ ஆர் கோடு, மெட்ரோ இணையதளம், ஒன் என் சி டிகள் மூலமாக டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இதன் மூலமாக பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்காது. இதனால் இந்த சேவையை பலரும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் செல்போன் வழியாக ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்போது வேலை செய்யாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மொபைல் செயலி மூலம் பெறப்பட்டவை உள்பட இணையவழி டிக்கெட்டுகள் (QR டிக்கெட்டுகள்) தற்காலிகமாக வழங்கப்படவில்லை.

அடுத்த அறிவிப்பு வரும் வரை, பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோளாறைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு CMRL வருத்தம் தெரிவிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.