டிச.4, 5ல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Nov 29, 2026, 13:22 IST
கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. டிசம்பர் 2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.5ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.