'மெட்டா என்டர்பிரைஸ்' என்ற புதிய நிறுவனத்தை துவக்கியது மெட்டா..!!
'மெட்டா என்டர்பிரைஸ்' என்ற புதிய நிறுவனத்தை பேஸ்புக் உரிமையாளரான மார்க் ஜூக்கர்பர்க், துவக்கி உள்ளார். அதன் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சிரந்தன் தேசாய் இருப்பார் என அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:மக்களுக்கும், வணிர்களுக்கும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் என நம்புகிறோம். கோடிக்கணக்கான மக்களுக்கு மெட்டா உதவுகிறது. வாடிக்கையாளர்களை சென்று அடைய லட்சக்கணக்கான வணிகர்கள் மெட்டாவால் பயன் பெற்றனர். ஏஐ பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள் வளர 'மெட்டா என்டர் பிரைசஸ்' என்ற நிறுவனத்தை துவக்குகிறோம்.
இந்நிறுவனத்தின் தலைவராக சித்ரஞ்சன் தேசாயை நியமிக்கப்படுகிறார். எனக்கு கீழ் அவர் பணியாற்றுவார்.ஏஐ, உள்கட்டமைப்பு, வணிக செயலிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் சித்ரஞ்சன் தேசாய் அனுபவம் பெற்றவர். மோங்கோ டிபி என்ற நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவராக உள்ள அவர் எங்களது நிறுவனத்தில் இணைய உள்ளார். அதற்கு முன், கிளவுட்பேரில் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவுக்கு தலைமை வகித்தார். சர்வீஸ்நவ் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், தலைவராகவும் இருந்துள்ளார்.
இவ்வாறு மார்க் ஜக்கர்பெர்க் கூறியுள்ளார்.