×

அழுகிய அண்ணனின் உடல் மீது நின்று சமைத்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி!

மதுரை முனியாண்டி புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.கொரோனா ஊரடங்கு என்பதால் ஜெயச்சந்திரன், சுப்புலட்சுமி இருவரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். இந்த சூழலில் ஜெயச்சந்திரன் எதிர்பாராத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால் தனது அண்ணன் இறந்தது தெரியாமல் அவர் தூங்குவதாக
 

மதுரை முனியாண்டி புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு என்பதால் ஜெயச்சந்திரன், சுப்புலட்சுமி இருவரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். இந்த சூழலில் ஜெயச்சந்திரன் எதிர்பாராத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆனால் தனது அண்ணன் இறந்தது தெரியாமல் அவர் தூங்குவதாக நினைத்து அவரது சகோதரி சுப்புலட்சுமி அண்ணனின் சடலத்துடன் வசித்து வந்துள்ளார். உச்சகட்டமாக அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்துள்ளார். இதனால் அழுகிய நிலையில் இருந்த ஜெயச்சந்திரனின் உடல் சேதமடைய தொடங்கியுள்ளது. அத்துடன் உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் அழுகிய நிலையில் பிணமாக இருக்க, அவரது உடல் அருகே சகோதரி சுப்புலட்சுமி அமர்ந்தபடி இருந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக சுப்ரமணியபுரம் காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அத்துடன் சுப்புலட்சுமியை மீட்டு மனநல காப்பகத்தில் அவர்கள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் சுப்புலட்சுமி மீட்டு மனநல காப்பகத்தில் அவர்கள் சேர்த்துள்ளனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது