☰
×

வெற்றி பயணத் திட்டத்தால் ஆண்களுக்கும் பயன்

 

வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கட்டண நடைமுறையில் மாற்றம் வந்துள்ளதால் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணமும் குறைந்துள்ளது.


த.வெ.க. அரசு தமிழகத்தில் கூடுதலாக அரசு புறநகர் பஸ்க ளிலும் பெண்களுக்கு இலவச பயணமாக வெற்றிப்பயண திட்டத்தை நேற்று தொடங்கி வைத்துள்ளது. அதேநேரத்தில் அந்த பஸ்களில் பயணம் கட்டணம் குறைக்கப்பட்ட தால், அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு வழக்கமாக ரூ.32 கட்டணம் ஆகும். ஆனால் நேற்று ரூ.24 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சில பஸ்களில் நேற்று ஆண்களுக்கான கட்டணம் குறைத்து வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, "மகளிர் வெற்றிப் பயணத்துக்காக, சில எக்ஸ் பிரஸ் பஸ்களை சாதாரண பஸ்களாக மாற்றம் செய்துள் ளோம். அதனால் டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கும்" என்றனர். ஆனால் ஆண் பயணி கள் இந்த கட்டண குறைப்பு தொடருமா? அல்லது வருவாய் இழப்பை தவிர்ப்பதாக கூறி மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிப்பார்களா? என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.