மெகா விளையாட்டு நகரம்- திமுகவின் பிளானை கேன்சல் செய்த தவெக
செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்தது தவெக அரசு.
செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்விக் குழுமத்தால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் 2,010 கோடி ரூபாய் மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை, கடந்த 18.09.2021 அன்று நமது திராவிட மாடல் அரசு அதிரடியாக மீட்டது. அந்தப் பிரம்மாண்டமான இடத்தில் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக, 18.02.2026 அன்று சர்வதேச தரத்திலான மெகா விளையாட்டு நகரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 112 ஏக்கரில் ரூ.206 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தவெக அரசு, எந்தவித முறையான காரணமும் இல்லாமல் அந்தப் பணி ஆணையை திடீரென ரத்து செய்துள்ளது. இத்திட்டம் ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது தவெக அரசு.