பெற்றோர்களுக்கு மெகா ஜாக்பாட்..! குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் முற்றிலும் இலவசம்!
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி, குழந்தைகளுக்கான ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முறை பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்வது கட்டாயமாகும். அதாவது ஐந்து வயது நிறைவடையும் போதும், 15 வயது நிறைவடையும் போதும் பயோமெட்ரிக் புதுப்பிப்பது கட்டாயமாகும். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல முக்கிய பணிகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
இந்த நிலையில் தான், இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் இலவசமாக குழந்தைகளுக்கு 2027 செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயோமெட்ரிக் அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதன்படி, 7 முதல் 15 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை செப்டம்பர் 30, 2027 வரை இலவசமாக செய்து கொள்ளலாம்.
பொதுவாக ஏழு முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு விளக்கின் காரணமாக தற்போது இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்யவில்லை என்றால் பெற்றோர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு சென்று அந்தப் பணிகளை செய்து முடிக்கலாம். இதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
அதே நேரத்தில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டியது அவசியம். பயோமெட்ரிக் அப்டேட் மட்டுமே இலவசமாக 2027 செப்டம்பர் வரை செய்து கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது