அம்பத்தூரில் மெகா டேட்டா சென்டர்- நாளை திறக்கிறார் முதலமைச்சர்
நாளை காலை அம்பத்தூரில் கேபிட்டலாண்ட் மெகா டேட்டா சென்டரை திறக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் CapitaLand நிறுவனத்தின் 34 MW / 53 MW திறன் கொண்ட அதிநவீன தரவு மையத்தை (Data Centre) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை காலை திறந்து வைக்கிறார். நாளை காலை நடக்கும் இந்த திறப்பு விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் CapitaLand உயர் அதிகாரிகள், தொழில்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஒரு டேட்டா சென்டர் மூலம் மட்டும் நேரடியாக 500 இளைஞர்களுக்கு ஐடி வேலை. மறைமுகமாக கட்டுமானம், பராமரிப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து என 5000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை மும்பை, பெங்களூருவில் இருந்த டேட்டா சென்டர் புரட்சி இனி சென்னையில்! CapitaLand நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1900 கோடி முதலீடு. இதனால் Facebook, Instagram, Google, AI நிறுவனங்களின் டேட்டா இனி சென்னையிலேயே பாதுகாக்கப்படும். இந்த டேட்டா சென்டர் 24 மணி நேரமும் மின்சாரம் பயன்படுத்தும். இதன் மூலம் TANGEDCO-விற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை மின் கட்டண வருவாய்!சென்னையில் டேட்டா சென்டர் வந்தால் நமது இணைய வேகம் 2 மடங்கு அதிகரிக்கும். கேமிங், OTT, AI அனைத்தும் இனி தடையின்றி பறக்கும்.