☰
×

தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி சந்திப்பு- கல்லூரி வளாகம் முழுவதும் பேனர்கள்

 

சோழிங்கநல்லூர் ஜே பி ஆர் கல்லூரியில்  2500க்கு மேற்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் தனுஷ்.

சோழிங்கநல்லூர் ஜேபிஆர் கல்லூரியில்  2500க்கு மேற்பட்ட பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்கிறார். தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பிரம்மாணட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அன்பு தலைவரே, எதிர்காலமே, தமிழகத்தின் செல்ல மகனே.. என விதவிதமான அடைமொழிகளுடன் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

தனுஷ் ரசிகர் மன்றத்தில் 58 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இருபதில் இருந்து 25க்கு மேற்பட்ட பெண் நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள்.  குறைந்தது 3000க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்து பேச இருக்கிறார் தனுஷ். இன்று 5 மணி வரைக்கும் இந்த நிகழ்வானது நடைபெறும் என கூறுகிறார்கள். தனுஷ் அரசியலுக்கு வர வேண்டும் என  பெண் நிர்வாகிகள் கூறுகிறார்கள். 2031 தேர்தலில் இரண்டு பேருக்கு தான் போட்டி ஒன்று விஜய் மற்றொன்று தனுஷ் என கூறுகிறார்கள்.