×

அதிமுகவில் இருந்து விலகிய மற்றொரு விக்கெட்

 

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் மீசை ராஜேந்திரன்

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பயணித்து வந்த நடிகர் மீசை ராஜேந்திரன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன் தேமுதிகவில் சீட் வழங்காத நிலையில், அதிமுகவில்இணைந்து தேர்தல் பணியாற்றினார். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் எம்எல்ஏவான இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த் முன்னிலையில் இன்று இணைந்தார். அவருடன் நடிகர் மீசை ராஜேந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் அதி வீரபாண்டியன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா பனையூரில் உள்ள த. வெ.க.அலுவலகத்தில் பொதுச் செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். உடன் நடிகர் மீசை ராஜேந்திரன் உள்பட  150 ஆதராவர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்