×

தேமுதிகளில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் இணைந்தார்!

 

தேமுதிகளில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் இணைந்தார்.

தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக இருந்த மீசை ராஜேந்திரன், கட்சியில் இருந்து விடுவிக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் அனுப்பினார். கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த தனக்கு, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக சார்பில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விஜயகாந்தின் வலது கரமாகப் பார்க்கப்பட்ட ஒரு விசுவாசி இப்போது கட்சியிலிருந்து விடைபெற்றது தேமுதிக-வுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தேமுதிகளில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைத்துக்கொண்டார். முன்னதாக விசுவாசத்திற்கு இடமில்லாததால் தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.