×

கொரோனா பாதித்தவர்களுக்கு நோயின் தன்மையை கண்டறியும் மருத்துவ பரிசோதனை முகாம்!

ஈரோடு, ஆக. 22- ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது இதில் மாநகராட்சி பகுதியில் தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் ரத்த அழுத்தம் ஆக்சிஜன் அளவு இருதய செயல்பாடு போன்றவை பரிசோதனை செய்து அவர்களில் நோயின் தீவிரத் தன்மையை கண்டறியும் முகாம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது இந்த முகாமை கலெக்டர் கதிரவன் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை
 

ஈரோடு, ஆக. 22-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது இதில் மாநகராட்சி பகுதியில் தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் ரத்த அழுத்தம் ஆக்சிஜன் அளவு இருதய செயல்பாடு போன்றவை பரிசோதனை செய்து அவர்களில் நோயின் தீவிரத் தன்மையை கண்டறியும் முகாம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது இந்த முகாமை கலெக்டர் கதிரவன் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டர் கதிரவனும் கமிஷனர் இளங்கோவனும் கொரோனா பரிசோதனை செய்து அவர்களின் உடலின் தன்மையை தெரிந்து கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறும்போது, மாநகராட்சி பகுதியில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர் இது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஏபிசி என மூன்று பிரிவாகப் பிரித்து அவர்களுக்கு ஸ்கிரீனிங் பரிசோதனை முகாமில் ரத்த அழுத்தம் இருதய செயல்பாடு ஆக்சிஜன் அளவு போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் குறைவான நோய் பாதிப்பு உடையவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம் .தொற்று உடையவர்கள் அவர்கள் குடும்பத்தார் அவருடன் தொடர்பில் இருந்த வரை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி வருகிறோம். இது போன்ற முகம் தொடர்ந்து நடைபெறும் இதன் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.