☰
×

"விஜய் அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதி மக்களும் வெளிப்படுத்தியுள்ளனர்”- வைகோ

 

வாகை சூடிய தவெக வேட்பாளர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் திருமதி மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.

வாகை சூடிய அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட…

— Vaiko (@Vaikooffl) October 9, 2026


இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ் தளத்தில், “மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத்  தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் திருமதி மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். வாகை சூடிய அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.  மதுராந்தகம், தாராபுரம் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.