×

“விஜய்யின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை”- வைகோ

 

இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

எனது அன்புச் சகோதரர், தமிழக முதல்வர் @TVKVijayHQ திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம்!

62 ஆண்டு கால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம், 6500 கி.மீ நடைபயணம் -… pic.twitter.com/vgrCSakJaT

— Vaiko (@Vaikooffl) July 20, 2026

 


இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “எனது அன்புச் சகோதரர், தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம்! 62 ஆண்டு கால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம், 6500 கி.மீ நடைபயணம் - இவையெல்லாம் நம் தாய் தமிழ்நாட்டைக் காக்கவே. இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை. யுத்த களத்தில் ராணுவத்திற்கு முன்சென்று பாதையைச் செம்மைப்படுத்தும் 'Sappers and Miners' போல, இந்த அரசுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும்! MDMK will behave like sappers and miners” எனக் குறிப்பிட்டுள்ளார்.