"விஜய்யின் த.வெ.க பிஜேபியின் பக்கம் சாயாது"- வைகோ
விஜய்யின் த.வெ.க பிஜேபியின் பக்கம் சாயாது. அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026' மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழன்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய வைகோ, “விஜய்யின் த.வெ.க பிஜேபியின் பக்கம் சாயாது. அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, சமூகநீதியைப் பாதுகாக்க அவர்கள் போர்களத்து சிப்பாய்களாக நிற்பார்கள். உங்கள் அரசிற்கு ஆபத்து விளைவிக்க எவர் முயன்றாலும் அதை தடுக்கின்ற போர்வாளாக கேடயமாக மதிமுக இருக்கும். ராணுவம் வருவதற்கு முன்பு அங்கிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் குழுவான sappers and miners போல் விஜய் அரசிற்கு நாங்கள் இருப்போம். இருக்கும் அணியை வெற்றி பெற வைக்கும் சேனாதிபதியாக இருந்தவன் நான். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை விஜய் ஒருபோதும் எடுக்க மாட்டார். தவெக அரசை கவிழ்க்க பலர் திட்டமிடுகின்றனர். ஆட்சி, அதிகாரம், கமிஷன் போய்விட்ட ஆத்திரத்தில் உள்ளனர். திமுக, அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுத்தாலும் பாஜக பக்கம் தவெக சாயாது” என்றார்.