முதல்வர் விஜய் செய்தது ஜனநாயகப் புரட்சி - வைகோ
எத்தனையோ புரட்சிகள் நடந்திருக்கிறது. ஆனால் 2026ல் நடந்தது தான் உண்மையான ஜனநாயக புரட்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இது பெரிய அரசியல் மோசடி, ஆட்சியிலே எடப்பாடி தொடரட்டும் , அதன் பலன்கள் திமுகவுக்கு தொடர்ந்து கிடைக்கும் என மோசடி செய்தவர்கள் திமுக. அதிகார மையம் இப்படி முடிவெடுத்துள்ளதை அறிந்து வேதனைப்பட்டு தான் கூட்டணியிலிருந்து வெளியேற அப்போதே முடிவெடுத்தோம்.
எத்தனையோ புரட்சிகள் நடந்திருக்கிறது. ஆனால் 2026ல் நடந்தது தான் உண்மையான ஜனநாயக புரட்சி!கோடிக்கணக்கான தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் கொடுத்த மகத்தான வெற்றி! எந்த கூட்டணி கட்சியும் இல்லாமல் தன்னந்தனியாக களத்தில் இறங்கி கோடிக்கணக்கான தாய்மார்கள் சீரி வரும் இளைஞர் படை பொங்கி எழுந்த மாணவர்கள் கொடுத்த பரிசு... கொடுத்த வரலாறு காணாத அளவில் வெற்றியை பெற்றவர் நம்ம முதல்வர் விஜய். இது அரசியல் தற்கொலை இல்லை...மிகப்பெரிய அரசியல் மோசடி..திமுகவின் முடிவை கண்டு நான் நிலைகுலைந்து போனேன். இந்த ஆரவாரத்தை பார்க்கும் போது மக்கள் நலக் கூட்டணி நினைவுகள் வருகிறது. வாக்குகள் கேட்காமல் வெற்றி பெற்றது காயிதே மில்லத் மற்றும் முத்துராமலிங்க தேவர்தான்; இருவருக்கு பிறகு வாக்கு சேகரிக்க செல்லாமல், கூட்டணி இன்றி வெற்றி பெற்றிருப்பவர் முதல்வர் விஜய் தன்னந்தனியாக தவெகவை களத்தில் நிறுத்தி ஜனநாயகப் புரட்சி செய்தவர் முதல்வர் விஜய். காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் வாக்கு கேட்காமல் வெற்றி பெற்றவர்கள். அதற்குப் பிறகு, 2026 தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லாமல், கூட்டணி இல்லாமல் மகத்தான வெற்றியை முதலமைச்சர் விஜய் பெற்றார்” என்றார்.