×

மதிமுக நிர்வாகிகள் தேர்தல்- ஜூன் 1ல் வேட்புமனு தாக்கல்

 

மதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 14.06.2023 சென்னை - அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ - புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு, 2023 ஜூன் 1 ஆம் நாள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது.

தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐவர் (ஒருவர் மகளிர்) ஆகிய பொறுப்புகளுக்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற இருபத்தைந்து (25) பேர் முன்மொழிந்தும், இருபத்தைந்து (25) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக ஏழு (7) பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற பத்து (10) பேர் முன்மொழிந்தும், பத்து (10) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.


வேட்பு மனு தாக்கல் நாள் - இடம்

01.06.2023 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 பகல் மணி வரை.

தலைமைக் கழக அலுவலகம், தாயகம், எழும்பூர், சென்னை - 600 008

27.05.2023 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கழக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார் (98402 17200) மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர்  ஆ.வந்தியத்தேவன் (94430 49151) ஆகியோரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வேட்பு மனு திரும்பப் பெறுதல்

03.06.2023 சனிக்கிழமை மாலை 3 மணி வரை.

கட்டணம்

தலைமைக் கழக நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பப் படிவம் - ரூ. 250/-

வேட்பாளர் கட்டணம் -   ரூ. 25,000/-

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்,  தணிக்கைக் குழு உறுப்பினர் வேட்புமனு விண்ணப்பப் படிவம் - ரூ. 100/-

வேட்பாளர் கட்டணம் - ரூ. 12,000/-

வேட்பாளர்கள் கட்டணம் வங்கி வரைவோலை (General Secretary, MDMK, ) அல்லது வங்கி (Canara Bank: SB  A/C No.  0416101011012; IFSC Code CNRB0000416) மூலமாகவோ செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.